என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் மீது தாக்குதல்"
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராமசந்திரன் (30). அதே பகுதியை சேர்ந்த அந்தோனி முத்து மகன்கள் கண்ணன், விஜய், உறவினர் அந்தோனி ராஜ் மகன் வல்லரசு. ராமசந்திரன்- கண்ணன் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அவ்வப்போது ஜாடையாக பேசி ராமசந்திரனை வம்புக்கு இழுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் அதே பகுதியை ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கண்ணன், விஜய், வல்லரசு ஆகியோர் சேர்ந்து ராமசந்திரனை அவதூறாக பேசினர்.
இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கண்ணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கல் மற்றும் கம்பால் அடித்து ராமசந்திரனை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை அறிந்த ராமசந்திரனின் தாய் மூவரையும் தட்டி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ராமசந்திரன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் அந்தோணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
கோவை வடவள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் நவீன்குமார் (வயது 24). அதே பகுதியில் பேனர் கடை நடத்தி வருகிறார். இவரும் ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று காதலியை மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டருகே கொண்டு வந்து நவீன்குமார் இறக்கி விட்டார். இதனை பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர் பார்த்து விட்டனர். அதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து நவீன்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து நவீன்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது19). இவர் அதே பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை சேர்ந்த கனகராஜ்(29) என்பவர் சதீஷ்குமாரிடம் கஞ்சா வாங்கி உள்ளார். ஆனால் அதற்குண்டான பணத்தை கனகராஜ் கொடுக்கவில்லை. இதனால் அன்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் கனகராஜை தாக்கி உள்ளார்.
இதனால் சதீஷ்குமாரை பழிதீர்க்க கனகராஜ் எண்ணினார். தனது கூட்டாளிகளான சண்முகாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (19), பூபதி (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேருடன் சதீஷ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
இதையடுத்து சதீஷ்குமார் அந்த பகுதியில் நின்றிருந்த போது கனகராஜ் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீஷ்குமாரை வெட்ட பாய்ந்தனர். இதனால் உயிருக்கு பயந்து சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் சதீஷ்குமாரை ஓட,ஓட விரட்டி வெட்டியது. கத்தியால் கழுத்தை அறுத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சதீஷ்குமார் மயங்கி விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சதீஷ்குமாரை மேட்டுப்பாளையம் போலீசார் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சதீஷ்குமார் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வடக்கு பகுதி மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து கனகராஜ், பன்னீர்செல்வம், பூபதி, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வீச்சறிவாள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
வளவனூர் அருகே கல்லிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ், (வயது 23) இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.500 கடன் வாங்கினார். இந்த பணத்தை சந்திரபோஸ் கேட்டார். இதனால் சேதுராமனோடு வாய் தகராறு ஏற்பட்டது.
இதைபார்த்த சேதுராமன் உறவினர்கள் கலியமூர்த்தி, வனிதா, ஜெயமணி, விஜயசாந்தி ஆகியோர் சந்திரபோசை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வளவனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தி உட்பட 4 பேரை கைது செய்தனர்.
தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் கே.கே.பட்டி முத்துமாடன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). அதே பகுதியைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் சந்திரன் வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரன் அவரை தட்டிக் கேட்டார்.
குடி போதையில் இருந்த செங்குட்டுவன் ஆத்திரத்தில் சந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்